• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொடநாடு விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபை மீறிய செயல் - ஜெயக்குமார்

கொடநாடு விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபை மீறிய செயல் - ஜெயக்குமார்

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

சட்டமன்றத்தில் விவாதிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன கொடநாடு விவகாரம் அத்தனை அவசரமா?

  • Share this:
    சட்டமன்றத்தில் விவாதிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன கொடநாடு விவகாரம் அத்தனை அவசரமா? என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், இது குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபை மீறிய செயல் என்று கூறியுள்ளார்.

    முன்னாள் அமைச்சர் ஜெயகுக்மார் பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் போட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், காங்ரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கொடநாடு விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவருவதாக கூறியுள்ளார்.

    சட்டமன்றத்தில் விவாதிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன கொடநாடு விவகாரம் அத்தனை அவசரமா? குடிநீர் பிரச்சனை, மக்கள் பிரச்னை, இயற்கை பேரிடர்கள் குறித்து எல்லாம் அவசர பிரச்னையாக சட்டமன்றத்தில் பேசுவார்கள், சட்டமன்ற மரபுகளை மீறி செல்வப்பெருந்தகை கொடநாடு குறித்து பேசப்போகிறார்.

    நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து விதி எண் 55-ல் சட்டமன்றத்தில் விவாதிப்பது மரபை மீறிய செயல். நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து சட்டமன்றத்தில், இதற்கு முன்னர், எந்த காலத்திலும் விவாதித்தது கிடையாது. இது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது. உரிமை மீறும் செயல் ஆகும்.

    கொடநாடு விவகாரம் குறித்து பேசி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மன ரீதியான அழுத்தத்தை கொடுத்து சுதந்திரமாக அதிமுக-வினர் சட்டமன்றத்தில் பேசவிடாமல் செய்ய உரிமை மீறல் நடக்கிறது.

    Must Read : தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றமாட்டார்கள், ஆனால் 100 நாள் ஆனதை கொண்டாடுவார்கள்: திமுகவை விமர்சித்த எல்.முருகன்

    கொடநாடு விவகாரம் சட்டமன்றத்தில் பேசினால் நீதிமன்ற விசாரனை திசை திரும்பிவிடும். அதிமுக யாருக்கும் எதற்கும் பயப்படவில்லை. நீதிமன்றத்தின் அதிகாரத்தை சட்டமன்றம் எடுத்துக்கொள்ள முடியுமா? ஜனநாயக மரபுகளை திமுக அரசு கட்டிக்காக்கும் என நம்புறேன்.” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: