‘நாசர் எப்போ தமிழ்நாடு டிஜிபி ஆனாரு?.. இவரே முடிவு எடுத்து, இவரே ரெய்டு நடத்துவாரோ?’ - டி.ஜெயக்குமார்

ஜெயகுமார்

திமுக அமைச்சர்கள் 22 பேர் மீது லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்கு நிலுவையில் இருக்கிறதே என ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

 • Share this:
  அமைச்சர் நாசர் எப்போ தமிழ்நாடு டிஜிபி ஆனார் என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘இவரே முடிவு எடுத்து, இவரே ரெய்டு நடத்துவாரோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  இது குறித்து டி.ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாசர் எப்போ தமிழ்நாடு DGP ஆனாரு?.. இவரே முடிவு எடுத்து, இவரே ரெய்டு நடத்துவாரோ? திமுக அமைச்சர்கள் 22 பேர் மேல லஞ்ச ஒழிப்பு உட்பட 83 வழக்கு நிலுவையில் இருக்கே.., அதுக்கு எப்போ ஆக்ஷன் எடுப்பீங்க நாசர் சார்..? வேணும்னா சொல்லுங்க அந்த பட்டியல நான் தரேன். DVAC- ஐ முடுக்கி விடுங்க...” என்று பதிவிட்டுள்ளார்.

     Must Read : எஸ்.பி.வேலுமணிக்கு அடுத்து ஜெயக்குமார் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் பரபரப்பு தகவல்

  முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தொடர்ந்து, டி. ஜெயகுமார் மீதும் நடவடிக்கை பாயும் என பால் வளத்துறை அமைச்சர் நாசர் கூறியிருந்த நிலையில், டி. ஜெயகுமார் இவ்வாறு கூறியுள்ளார்.
  Published by:Suresh V
  First published: