முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதலா? - ஜெயக்குமார் விளக்கம்

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதலா? - ஜெயக்குமார் விளக்கம்

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

ADMK Meeting : சென்னையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாயின.

  • Last Updated :

அதிமுக அமைப்பு தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட தேர்தலை நடத்துவது, கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்த மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் பலர் தங்கள் ஆதரவாளர்களை நியமித்திருப்பதும் அதில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக இருப்பதும் ஓபிஎஸ் தரப்புக்கு தெரிந்ததால், நிர்வாகிகள் நியமனத்துக்கான ஒப்புதல் கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பமிட மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும், கட்சி நலனுக்காக சில மாவட்ட செயலாளர்களை நீக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அதைத்தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, உட்கட்சி தேர்தல் முழுமையாக நடந்து முடிந்த பிறகு மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம் என்று கூறியதாகவும், இதற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாயின.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எழுந்து, கட்சியின் நடவடிக்கைகளில் தான் புறக்கணிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தாகவும், மேலும், வைத்திலிங்கம் கூட்டத்தில் இருந்து கோபமாக வெளியேற, அவரை நிர்வாகிகள் சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டத்திற்கு அழைத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு பரபரப்பான சூழலில் நடந்த இந்த கூட்டம் இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது.

அதன்படி, சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் 4 மணி நேரம் உட்கட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரி உயர்வை பிற மாநிலங்கள் குறைத்துள்ளதை போல தமிழக அரசு குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Must Read : கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட வேண்டாம் - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் மோதல் எழுந்ததாக வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்த அவர், கட்சியின் வளர்ச்சி குறித்து மட்டுமே விவாதித்தாகவும், நிர்வாகிகள் மத்தியில் எவ்வித மோதலும் ஏற்படவில்லை என்றும் கூறினார். சசிகலாவுக்கும் அதிமுகவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை எனவும் கட்சியில் இல்லாத நபரை பற்றி விவாதித்து நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை எனவும் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளித்தார்.

Read More : திருச்சியில் எடப்பாடி பழனிசாமி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மேலும், கடந்த 9 மாத திமுக ஆட்சியால் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை என்று குற்றம் சாட்டிய ஜெயக்குமார், திமுக ஆட்சி எதற்கும் பயன்படாத சீமை கருவேல மரம் எனவும் விமர்சித்தார்.

First published:

Tags: ADMK, Jayakumar, OPS - EPS