Home » News » Tamil-nadu » CYLONE NIVAR LIVE UPDATES TRAIN CANCELLATIONS AND CHANGES DUE TO THE CYCLONE VJR

நிவர் புயல் : தமிழகத்தில் 6 விரைவு ரயில்கள் உட்பட 15 ரயில் சேவைகள் ரத்து

நவம்பர் 25-ம் தேதி சென்னை - தஞ்சாவூர் (Train NO : 06866) , சென்னை - திருச்சி (Train NO : 06795) , திருச்சி - சென்னை (Train NO : 06796) ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

நிவர் புயல் : தமிழகத்தில் 6 விரைவு ரயில்கள் உட்பட 15 ரயில் சேவைகள் ரத்து
கோப்பு படம்
  • Share this:
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் சென்னை, திருச்சி, தஞ்சாவூர் இடையேயான ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும்.

இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் இயக்கப்படும் 15 ரயில் சேவைகள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 24-ம் தேதி சென்னை - தஞ்சாவூர் (Train NO : 06866), தஞ்சாவூர் - சென்னை (Train NO : 06865) இடையேயான ரயில் சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


அதேப்போன்று நவம்பர் 25-ம் தேதி சென்னை - தஞ்சாவூர் (Train NO : 06866) , சென்னை - திருச்சி (Train NO : 06795) , திருச்சி - சென்னை (Train NO : 06796) ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.



மேலும் நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் மைசூர் - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - மைசூரு, ஏர்ணாகுளம் - காரைக்கால், காரைக்கால் - ஏர்ணாகுளம், கோயம்புத்தூர் - மயிலாடுதுறை, மயிலாடுதுறை - கோயம்புத்தூர், புவனேஷ்வர் - பாண்டிச்சேரி, பாண்டிச்சேரி - புவனேஷ்வர், பாண்டிச்சேரி - ஹவுரா ஆகிய ரயில்களில் குறிப்பிட்ட பகுதிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



நிவார் புயல் குறித்த தகவல்களை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ளுங்கள்
First published: November 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading