6 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை.. 14 மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..
6 மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்றும், 14 மாவட்டங்களில் பரவலாகவும் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோப்பு படம்
- News18 Tamil
- Last Updated: November 25, 2020, 1:19 PM IST
நிவர் புயல் சென்னைக்கு தென்கிழக்கில் 300 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கில் 250 கிலோ மீட்டர் தொலைவில், கடலூருக்கு தென் கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டு மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று இரவு புதுச்சேரி அருகே புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 115 கி.மீ வேகத்தில் இருக்கும்.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கனமழையை பொருத்தவரையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி இந்த மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்.
பலத்த காற்றை பொறுத்தவரையில் முன்பு கூறியபடி புயல் கரையை கடக்கும் பகுதியில் நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 130 முதல் 140 கி.மீ வேகத்திலும் சில சமயங்களில் 155 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். திருவாரூர், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் சில சமயங்களில் 100 கிலோமீட்டர் வேத்திலும் காற்று வீசக்கூடும். கடல் இன்று இரவு வரை தொடர்ந்து கொந்தளிப்பாக காணப்படும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24-ஆம் தேதி அதிகபட்சமாக சென்னையில் 16 மி.மீ சென்றுவிட்டு மழை பதிவாகி உள்ளது.
நிவர் புயல் குறித்த அப்டேட்டுகளுக்கு கிளிக் செய்க
சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை இருக்கும். புயலின் கண் பகுதி உருவாகவில்லை. வட கிழக்கு பருவமழை பொருத்தவரை 338 மி.மி இயல்பாக பெய்யக் கூடியது. இம்முறை 249 மி.மீ பெய்து 26% குறைந்துள்ளது. சென்னையில் 14% அதிகமாக மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். அடுத்து 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கனமழையை பொருத்தவரையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி இந்த மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும்.
பலத்த காற்றை பொறுத்தவரையில் முன்பு கூறியபடி புயல் கரையை கடக்கும் பகுதியில் நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 130 முதல் 140 கி.மீ வேகத்திலும் சில சமயங்களில் 155 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.