சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்தியக் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவாகியுள்ளதாகவும், இது ஞாயிறு அன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, 24ஆம் தேதி புயலாக வலுவடையும் என்று தெரிவித்துள்ளது. யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இப்புயலானது, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வடக்கு ஒடிசா- வங்கதேசக் கரையை 26ஆம் தேதி கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெப்பசலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்கள்,
புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
யாஸ் புயல் காரணமாக 18
சிறப்பு ரயில்கள் தற்காலிக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில் -ஷாலிமார் சிறப்பு ரயில் மே23 வரை, ஷாலிமார் -நாகர்கோவில் சிறப்பு ரயில் மே26 வரை, ஹவுரா -கன்னியாகுமரி சிறப்பு ரயில் மே24 வரை, ஹவுரா - சென்னை சிறப்பு ரயில் மே24 முதல் மே 26 வரை ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரி - ஹவுரா இடையிலான ரயிலும் 26ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் 10 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன. இதனால் எம்.புதூர், ராமாபுரம், வழிசோதனைபாளையம், வெள்ளைபாக்கம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சிதம்பரம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 5,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. சிலம்பிமங்கலம், வில்லியநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆனால் கொள்முதல் நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாகவும், சில நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கேயே வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழையால் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன.
மேலும் படிக்க...
Egg Rate | முட்டை கொள்முதல் விலை ஒரே வாரத்தில் 70 காசுகள் உயர்ந்தது...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குளச்சல், நாகர்கோவில், தக்கலை, அழகியமண்டபம், திங்கள்சந்தை , மார்த்தாண்டம் உட்பட, மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், படகுகள் கரையிலேயே பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.