• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இன்னும் சில மணி நேரங்களில் புயல்.. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை - எச்சரிக்கும் வானிலை மையம்

இன்னும் சில மணி நேரங்களில் புயல்.. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை - எச்சரிக்கும் வானிலை மையம்

மழை - கோப்புப் படம்

மழை - கோப்புப் படம்

Weather Update | சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • Share this:
    வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானில ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாறக்கூடும். இந்த புயல் சின்னம் மேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை வடக்கு ஆந்திர-தெற்கு ஒடிசா கடற்கரையை  விசாகபட்டினம்-கோபால்பூர்க்கு இடையே கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த புயல் காரணமாக தமிழகத்தில் அநேக மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, 25.09.2021: மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26.09.2021:  தென்  மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    27.09.2021: தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், தென்  மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    28.09.2021: தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Also Read : மழை காலம் வருது... முன்னெச்சரிக்கையாக சென்னை ஏரிகளை ஆய்வு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

    29.09.2021: கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுமேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுமேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):தேவகோட்டை (சிவகங்கை) 14, மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), சேரன்மகாதேவி (திருநெல்வேலி ) தலா 11,  மதுரை  விமான நிலையம் , முசிறி (திருச்சிராப்பள்ளி) தலா 10, குளித்தலை (கரூர்) 8,  திருமங்கலம் (மதுரை) 7, வேடசந்தூர் (திண்டுக்கல்), சத்தியமங்கலம்  (ஈரோடு), வாடிப்பட்டி (மதுரை), கரூர், அவலஞ்சே (நீலகிரி) தலா 6, அவிநாசி (திருப்பூர்), மன்னார்குடி (திருவாரூர்), கயத்தாறு (தூத்துக்குடி), அன்னுர் (கோவை), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) தலா 5, திருமானுர் (அரியலூர்), வால்பாறை  (கோவை), சிட்டம்பட்டி (மதுரை), சோழவரம் (திருவள்ளூர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), புதுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), உதகமண்டலம் (நீலகிரி), பவானிசாகர் (ஈரோடு) தலா 4.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக் கடல் பகுதிகள்
    26.09.2021 ,27.09.2021: பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
    மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் .

    அரபிக்கடல் பகுதிகள்:26.09.2021, 27.09.2021: பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில்  கேரளா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்.
    மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: