அதி தீவிர புயலாக வலுபெற்ற டவ்-தே: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

டவ்-தே புயல் இன்று காலை அதி தீவிர புயலாக  வலுபெற்று, தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது

டவ்-தே புயல் இன்று காலை அதி தீவிர புயலாக  வலுபெற்று, தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது

  • Share this:
    டவ்-தே புயல் இன்று காலை அதி தீவிர புயலாக  வலுபெற்று, தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று முன்தினம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது.  நேற்றைய தினம் இது புயலாக மாறியது. இந்த புயலுக்கு டவ் - தே என வானிலை மையம் பெயரிட்டுள்ளது. இன்று காலை இந்த புயல் அதி தீவிர புயலாக  வலு பெற்றுள்ளது.  தற்போது மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இந்த புயல்  நிலை கொண்டுள்ளது.

    இது வடக்கு, வடக்கு-மேற்கு திசையில் நகர்ந்து மே 18ஆம் தேதி மதியம் அல்லது மாலையில் குஜராத்தில் போர்பந்தர் மற்றும் நாலியாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டவ்-தே புயல் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில்,  டவ்-தே புயல் காரணமாக  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  இன்று இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளைய தினம்,  நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

    நாளை மறுநாள் புயல் கரையை கடக்கவுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    19ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் திருநெல்வேலி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்  லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்

    20ம் தேதி, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கர்நாடக கடலோர பகுதிகளில் இன்று  சூறாவளி காற்று மணிக்கு 70-80 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால்  மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மத்திய கிழக்கு அரபிக்கடல், பகுதிகளில்  நாளை சூறாவளி காற்று மணிக்கு 145-155 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 170 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அப்பகுதியில் மீன் பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: