Cyclone Nivar | நிவர் புயல் - பெயர்க்காரணம் என்ன? பரிந்துரைத்தது யார்?
நிசர்கா புயல் பெயர் வங்காளதேசத்தால் வழங்கப்பட்டது. கதி புயல் இந்தியாவால் வழங்கப்பட்டது. மேலும் நிவர் புயலின் பெயர் ஈரான் நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட பெயராகும்.

கோப்பு
- News18 Tamil
- Last Updated: November 25, 2020, 6:44 PM IST
2018-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கஜா புயலுக்குப் பின்பு, தமிழகத்தை தாக்கும் இரண்டாவது புயல் நிவர் புயல். இந்த ஆண்டு கொரோனா தாக்கத்தால் பாதிப்புகளைச் சந்தித்த மக்கள், நிவர் புயலால் மேலும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
World Meteorological Organisation-இன் வழிகாட்டுதலின் அடிப்படையில்தான், அனைத்து நாடுகளில் ஏற்படும் புயலுக்கு பெயர் கொடுக்கப்படுவதைப் போல இப்புயலுக்கு நிவர் என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Cyclone Nivar: புதுவையில் இருந்து 120 கிமீ தொலைவில் நிவர் புயல்.. பலத்த காற்று, கனமழை எச்சரிக்கை
வங்காளதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ட்ராபிக்கல் புயல் தோன்றும் இடங்களான வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலுக்கு வடக்கு திசையில் அமைந்திருக்கின்றன. 2018-இல் இந்த பகுதி புயல் தாக்கும் நாடுகளாக ஈரான், கத்தார், சவுதி அரேபியா, அமீரகம் மற்றும் ஏமன் நாடுகளும் சேர்க்கப்பட்டது.
மொத்தமாக 169 புயல்களுக்கு இந்த நாடுகளால் பெயர் கொடுக்கப்படுகிறது. 13 பெயர்கள் 13 நாடுகளால் வழங்கப்பட்டு, ஒவ்வொரு நாட்டின் பெயரும் ஆல்ஃபாபெட்டிக்கல் வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டு, நெடுவரிசை ரீதியில் புயல்களின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.புயலுக்கு பெயர் அளிப்பதன் மூலமாக பல விஷயங்களை அடையாளம் கண்டுகொள்வது சுலபமாகிறது. ஊடகங்கள் புயல் குறித்த செய்திகளைத் தெரிவிப்பது வசதியாகிறது. மேலும் தயார்நிலை, பாதிப்பு குறித்த தரவுகளை தருவதற்கும் இது உதவியாக அமைகிறது.
நிசர்கா புயல் பெயர் வங்காளதேசத்தால் வழங்கப்பட்டது. கதி புயல் இந்தியாவால் வழங்கப்பட்டது. மேலும் நிவர் புயலின் பெயர் ஈரான் நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட பெயராகும்.
World Meteorological Organisation-இன் வழிகாட்டுதலின் அடிப்படையில்தான், அனைத்து நாடுகளில் ஏற்படும் புயலுக்கு பெயர் கொடுக்கப்படுவதைப் போல இப்புயலுக்கு நிவர் என்னும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: