Home /News /tamil-nadu /

#BREAKING | பேருந்து சேவை நிறுத்தப்பட்ட மாவட்டங்களில் 12 மணிமுதல் சேவையை தொடங்க உத்தரவு..

#BREAKING | பேருந்து சேவை நிறுத்தப்பட்ட மாவட்டங்களில் 12 மணிமுதல் சேவையை தொடங்க உத்தரவு..

பேருந்து சேவை

பேருந்து சேவை

நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், 7 மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக 7 மாவட்டங்களுக்கு நிறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று பிற்பகல் 12 மணி முதல் மீண்டும் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    நிவர் புயல் பாதிப்பு காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. மேலும் இம்மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம் உள்ளிட்ட 11 பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த 826 அரசுப்பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. அனைத்து பேருந்துகளும் போக்குவரத்துக்கழக பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    இதனால் பேருந்து நிறுத்தப்படுவது குறித்த தகவல் தெரியாதவர்களும், வெளியூர் சென்றிருந்தவர்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாயினர்.



    இதனிடையே தற்போது நிவர் புயல் கரையைக் கடந்துள்ளநிலையில், 7 மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Cyclone Nivar, Nivar

    அடுத்த செய்தி