Cyclone Nivar | நிவர் புயல் மீட்பு பணிகளுக்கு நியமிக்கப்பட்ட தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள் தயார்நிலை..
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த புயல் மீட்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

பேரிடர் மீட்பு - கோப்புப் படம்
- News18 Tamil
- Last Updated: November 24, 2020, 6:51 AM IST
வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் நாளை கரையைக் கடக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த புயல் மீட்பு மற்றும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் மீட்புப்படையில் (NDRF) இருந்து 30 குழுவினர் இந்த மாநிலங்களுக்கு வருகை தர உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 35 முதல் 45 வரையிலான வீரர்கள் இடம்பெறுவார்கள். இதில் 12 குழுக்கள் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிறுத்தப்படுவார்கள். 18 குழுக்கள் தயாராக வைக்கப்பட்டிருப்பார்கள்.
இந்த தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள். முறிந்து விழும் மரங்களை அகற்றுவதற்கு நவீன ஆயுதங்கள், அடிப்படை மருந்துகள் மற்றும் உபகரணங்களும் இந்த படையினரிடம் இருக்கும் என என்.டி.ஆர்.எப். தெரிவித்துள்ளது