Cyclone Nivar | சென்னையில் தொடரும் கனமழை: கருணாநிதி இல்லத்துக்குள் புகுந்த மழை நீர்
சென்னையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக கோபாலபுரத்திலுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் மழை நீர் புகுந்துள்ளது.

மழைநீர் புகுந்த கருணாநிதி இல்லம்
- News18 Tamil
- Last Updated: November 24, 2020, 10:48 PM IST
வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலானது நாளை மாலை தொடங்கி இரவு வரை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் நாளை மிக அதிக கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, போரூர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. தேனாம்பேட்டை, திருவான்மியூர், அடையாறு, தியாகராயநகர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு இடி, காற்றுடன் தொடங்கிய மழை, இன்றும் தொடர்ந்து நீடித்தது.
இந்தநிலையில், சென்னை கோபாலபுரத்திலுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் மழை நீர் புகுந்தது.