• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Petrol Diesel | பெட்ரோல் பங்குகள் இன்று வழக்கம்போல் இயங்கும்.. பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

Petrol Diesel | பெட்ரோல் பங்குகள் இன்று வழக்கம்போல் இயங்கும்.. பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

இன்று வழக்கம்போல் பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் என்று பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

  • Share this:
    நிவர் புயல் இன்று கரையைக் கடக்க உள்ள நிலையில், தமிழக அரசு நிவர் புயலை எதிர் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது விடுமுறை அறிவித்துள்ளது. பெட்ரோல்-டீசல் விற்பனை அத்தியாவசிய சேவையினை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்களும் பாதுகாப்புடன் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அத்தியாவசிய தேவையினை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களும் இயங்கும் எனத் தெரிவித்துள்ளது.

    மேலும் படிக்க...

    Cyclone Nivar | சென்னையில் 2-வது நாளாக வெளுத்து வாங்கிய மழை (வீடியோ) 

    Cyclone Nivar | சென்னையில் பால் விநியோகத்தில் பாதிப்பு இருக்காது: ஆவின் நிறுவனம் அறிவிப்பு..



    அதே சமயம் புயலினை எதிர்கொள்ளும் மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் புயல் கரையை கடக்கும்போது விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: