• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புயல் பாதித்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்: நிவாரணப் பொருள்கள் வழங்கி உதவி

புயல் பாதித்த மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்: நிவாரணப் பொருள்கள் வழங்கி உதவி

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

சென்னை சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் ஆய்வு செய்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.

  • Share this:
    வங்கக் கடலின் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று இரவு 11.30 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கி இன்று அதிகாலை 2.30 மணிக்கு முழுவதுமாக கரையைக் கடந்து முடித்தது. நிவர் புயல் கரையைக் கடப்பதன் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. அதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலரும் அரசு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சென்னை சைதாப்பேட்டை ஆடு தொட்டி பாலம் அருகே பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

    அங்கு அடையாறு வெள்ள நீரை பார்வையிட்ட அவர், திடீர் நகர் பகுதியில் போர்வை, ரொட்டி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய நலத்திட்ட உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். மு.க.ஸ்டாலினுடன், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் இருந்தனர்.

    இதையடுத்து, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன் ஏற்பாட்டில், சென்னை எம்.ஜி.ஆர் நகர் மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்கும் அப்பகுதியில் பாதிக்கப்பட்டோருக்கும் உணவு, உடை, போர்வை உள்ளிட்ட அடிப்படை பொருட்களை கட்சித் தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

    தொடர்ந்து, சென்னை வேளச்சேரி ராம்நகரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின், அங்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். நலத்திட்ட உதவிகளை இரண்டாம் நாளாக வழங்கிய ஸ்டாலின், சோழங்கநல்லூரில் உள்ள ஒரு தேநீர் கடைக்கு சென்று தேநீர் அருந்தினார்.



    அடுத்த, சோழங்கநல்லூரில் புயலால் பாதித்த மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். அங்குள்ள அரசு பள்ளியில் தங்கியிருக்கும் ஆயிரம் பேருக்கு உணவு, உடை, போர்வை, பால், ரொட்டி உள்ளிட்டவற்றை சோழங்கநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார். அவற்றை மு.க.ஸ்டாலின் வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: