ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் உள்ள 39,000 தெருக்களில் 58 தெருக்களில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளது - அமைச்சர் வேலுமணி..

சென்னையில் உள்ள 39,000 தெருக்களில் 58 தெருக்களில் மட்டுமே மழைநீர் தேங்கியுள்ளது - அமைச்சர் வேலுமணி..

அமைச்சர் எஸ்.பி வேலுமணி

அமைச்சர் எஸ்.பி வேலுமணி

கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 17,500 வீடுகளுக்கு மாற்று இடம் அளித்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 8,000 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சென்னையில் உள்ள 39,000 தெருக்களில் 58 தெருக்களில் மட்டுமே தற்போது மழைநீர் தேங்கியுள்ளதாகவும், அவை கூடுதல் இயந்திரங்கள் மூலம் 2 அல்லது 3 தினங்களில் வெளியேற்றப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அரசு முகாமை பார்வையிட்டு, மழையால் பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புயல் பாதித்த பகுதிகளில் பாதிப்பு குறைவாக இருந்ததாக தெரிவித்தார்.

சென்னையில் நேற்று முன்தினமும், நேற்றும் மட்டும் 287 மரம் மற்றும் கிளைகள் சாய்ந்தாக தெரிவித்தார். சென்னையில் பிரதான சாலைகளில் விழுந்த மரங்கள் இரவோடு இரவாகவே அகற்றப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.

கூவம், அடையாறு உள்ளிட்ட ஆறுகளில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 17,500 வீடுகளுக்கு மாற்று இடம் அளித்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 8,000 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Also read... Cyclone Nivar | புயலை தாங்கும் அளவுக்கு சென்னை மாறினாலும், பாராட்டும் அளவுக்கு இல்லை - கமல்ஹாசன்..

சென்னையில் 39,000 தெருக்களில் சுமார் 500 தெருக்கள் தான் மழை நீர் தேங்கக்கூடிய தெருக்களாக இருப்பதாக தெரிவித்த அவர், அவற்றுள் தற்போது 58 தெருக்களில் தான் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் அவற்றையும் இரண்டு அல்லது மூன்று நாள்களில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் வேலுமணி புயல் சேதங்களை கணக்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Cyclone Nivar, Minister sp velumani