Home /News /tamil-nadu /

Cyclone Nivar | புயல் கரை கடந்த பிறகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை மக்கள் வெளியே வரவேண்டாம்.. அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..

Cyclone Nivar | புயல் கரை கடந்த பிறகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை மக்கள் வெளியே வரவேண்டாம்.. அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..

அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

அமைச்சர் ஆர்.பி உதயகுமார்

Cyclone Nivar | புயல் கரை கடந்த பிறகும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

    நிவர் புயல் இன்று கரையைக் கடக்க உள்ள நிலையில், தமிழக அரசு நிவர் புயலை எதிர் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் புயல் கரை கடந்த பிறகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறிவித்துள்ளார். 

    சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் குடிசை வீடுகளில் வசிப்பவர்களை முகாம்களுக்கு இடமாற்றும் பணி முழு வீச்சில் நடைபெறுவதாகக் கூறினார். இதுவரை 104 முகாம்களில் 4509 பேர் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் படிக்க...நிவர் புயல் - இன்று பொது விடுமுறை - டாஸ்மாக் கடைகளை சூழலுக்கு ஏற்ப மூட உத்தரவு 

    Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

    புயலின் மையப் பகுதி நகர்ந்த பிறகும் காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்பதால், மின் கம்பங்கள், பயிர்கள், குடிசை வீடுகளுக்கு சேதத்தை விளைவிக்கும் அபாயம் இருப்பதாகவும், பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Cyclone Nivar, Nivar, RB Udayakumar, Tamilnadu weather man, Weather Forecast, Weather Update

    அடுத்த செய்தி