• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • #BREAKING | பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை சிரமமின்றி பெற நடவடிக்கை - அமைச்சர் காமராஜ் தகவல்..

#BREAKING | பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை சிரமமின்றி பெற நடவடிக்கை - அமைச்சர் காமராஜ் தகவல்..

கோப்புப் படம்

கோப்புப் படம்

புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ரேஷன் கடைகளை முன் கூட்டியே திறக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ரேஷன் கடைகளை முன் கூட்டியே திறக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

    உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தகவலில்,  பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை சிரமமின்றி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் இருந்தால் ரேஷன் கடைகள் மூடும் நேரத்தையும் நீடிக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளும் வகையில் நியாய விலைக் கடைகளை ஏழு மணிக்கு திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வழக்கமாக காலை 9 மணிக்கு நியாயவிலை கடைகள் திறக்கப்படும்.



    லாரிகள் செல்ல முடியாத உட்புற கிராம பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு ஏற்கனவே வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கொண்டுசெல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் மழை தீவிரம் அடைவதற்கு முன்னர் நியாயவிலைக் கடைகள் மூலமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பகுதிநேர கடைகள் உட்பட 756 நியாயவிலைக் கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: