Home /News /tamil-nadu /

Cyclone Nivar - நிவர் புயலின் கண் பகுதி மரக்காணம் அருகே கரையைக் கடக்கும் என தகவல்

Cyclone Nivar - நிவர் புயலின் கண் பகுதி மரக்காணம் அருகே கரையைக் கடக்கும் என தகவல்

நிவர் புயல்

நிவர் புயல்

மரக்காணம் அருகே ஆலம்பரை அருகே அதிகாலையில் நிவர் புயல் கரையை கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    அதி தீவிர புயலாக மாறிய நிவர் தற்போது கடலூருக்கு 95 கி.மீ கிழக்கே மையம் கொண்டு, சுமார் 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. கடலூருக்கு கிழக்கே தற்போது கடந்து செல்வதால் இனி புதுச்சேரி, கடலூர், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களை புயல் நேரடியாக தாக்கும் அபாயம் ஏறக்குறைய இல்லை என்றே கடலூர் வானிலை மைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நிவர் புயல் மரக்காணம் - செய்யூர் இடையில் ஆலம்பறை அருகே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் வெளிவட்டம் நிலம் தொட்டு வருவதாகவும், கண்பகுதி இரவு 11 மணிக்கு கரைதொட துவங்கி அதிகாலை 3 மணிக்கு நிறைவடையும் என்றும் வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் படிக்க: செம்பரம்பாக்கத்தில் 7 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    முழுமையாக கரையைக் கடக்க நாளை காலை 10 மணி வரை கூட ஆகலாம் என்றும் கரையைக் கடக்கும் போது வலுப்பெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 12 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Chennai Rain, Cyclone Nivar, Nivar

    அடுத்த செய்தி