நிவர் புயல் ஸ்லோ மோஷனில் நகர்ந்து வருகிறது... திசை மாறுமா..?
நிவர் புயல் மெதுவாக மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது திசை மாற வாய்ப்பில்லை என்றும், நாளை மாலை கரையை கடந்துவிடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல்
- News18 Tamil
- Last Updated: November 24, 2020, 7:12 PM IST
தற்பொழுது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கு 380 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 430 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயலானது, தற்போது அது மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர துவங்கி உள்ளதாக வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார்.
இதையடுத்து வரும் 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் அதனைத் தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் மாறக்கூடும். வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும்.
காரைக்கால், நாகை, கடலூர், புதுவை, மயிலாடுதுறை, செங்கல்ப்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலோ, சமயங்களில் 145 கிலோ மீட்டர் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சமயங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சென்னையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் தாக்கம் கஜா புயலைவிட குறைவாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தாமதமாவதால் திசை மாறி செல்லாது என்றும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்தார். ஒருவேளை இயற்கையின் சூழலால் மாற்றங்கள் நிகழவும் வாய்ப்பிருப்பதாக தெரிவித்தார்.
மழை, புயல் செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இதையடுத்து வரும் 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் அதனைத் தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாகவும் மாறக்கூடும். வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கும் இடையே புதுச்சேரிக்கு அருகில் நாளை மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும்.
காரைக்கால், நாகை, கடலூர், புதுவை, மயிலாடுதுறை, செங்கல்ப்பட்டு ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலோ, சமயங்களில் 145 கிலோ மீட்டர் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.