Cyclone Nivar | புயல் கடக்கும் பகுதியில் வசிப்பவரா? இந்த 10 விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..
புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நிவர் புயல்
- News18 Tamil
- Last Updated: November 25, 2020, 6:58 PM IST
மாலை 4 மணிக்கு நிவர் புயல் கடலூரை தொட்டதாக வானிலை மையம் அறிவித்திருக்கும் நிலையில் புதுச்சேரிக்கு சற்று வடக்கே கரையைக் கடக்கும் என்றும் கரையை முழுமையாக கடந்து முடிக்க நள்ளிரவைத் தாண்டிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில்..
1. கடற்கரைப் பகுதிகளுக்கு, சென்று வீடியோ எடுப்பது செய்வது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமையலாம் 2. வீட்டின் கதவு மற்றும் சன்னல்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் கதவோ, சன்னல் கதவோ நல்ல நிலையில் இல்லாவிட்டால், அதை உடனடியாக சரி செய்துகொள்வது நல்லது.
3. காற்றின் அழுத்தத்தால் சன்னல் கண்ணாடிகள் விரிசல்விட்டு உடையவோ, உடைந்து சிதறவோ வாய்ப்புண்டு. மரப்பலகை, துணி ஏதேனும் இருந்தால், சன்னலை அதை வைத்து மூடிக்கொள்ளுங்கள். கண்ணாடித் துண்டுகள் காற்றின் வேகத்தில் வீட்டுக்குள் சிதறுவதை அது தடுக்கும்.
4. சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் பழைய கட்டங்களுக்கு உள்ளேயோ அருகிலோ இருப்பதைத் தவிர்க்கவேண்டும்.5. பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.
6. பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை ஓரிரு நாட்களுக்கு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
7. உங்கள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தொண்டூழிய அமைப்புகளின் உதவி எண்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
8. மின்சாரம் இல்லாமல் போனால், தொலைக்காட்சி செய்திகளை எல்லோரும் பார்க்க முடியாது. செல்பேசியை செய்திக்கு வழி. அதனால் சமூக ஊடகங்களில் வரும் அனைத்து தகவல்களையும் நம்பிவிடாமல், போலிச் செய்திகள் குறித்து கவனமாக இருங்கள். அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டுமே நம்புங்கள்.
9. புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லாமல் வெளியே செல்ல நேர்ந்தால் கவனமாக இருக்கவும். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் கவனம் தேவை.
மேலும் படிக்க: Cyclone Nivar | நிவர் புயல் - பெயர்க்காரணம் என்ன? பரிந்துரைத்தது யார்?
10. கனமழையும் புயலுடன் சேர்ந்து வரும். தாழ்வான பகுதிகளில் உங்கள் வீடு இருந்தால், விலைமதிப்புள்ள பொருட்களையும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பத்திரப்படுத்திவிட்டு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது நல்லது.
புயல் கரையைக் கடக்கும் நேரத்தில்..
1. கடற்கரைப் பகுதிகளுக்கு, சென்று வீடியோ எடுப்பது செய்வது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமையலாம்