முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Cyclone Nivar: புயல் காரணமாக, பெரிய பேனர்களை அகற்ற அரசு உத்தரவு

Cyclone Nivar: புயல் காரணமாக, பெரிய பேனர்களை அகற்ற அரசு உத்தரவு

சென்னையில் மழை

சென்னையில் மழை

விளம்பர பதாகைகள் அகற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நிவர் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் சென்னை முழுவதும் வைக்கப்பட்டுள்ள பெரிய பேனர்களை, உடனடியாக அகற்றுமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நிவர் புயலானது இன்று நள்ளிரவு மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பெரிய பேனர்களை அகற்றிட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே கட்டுப்பாட்டு அறையிலிருந்து அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், விளம்பர பதாகைகள் அகற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காற்று அதிகமாக வீசும் போது பேனர்கள் சரிந்து சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கையாக அவற்றை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் வைக்கப்பட்டுள்ள பேனர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

மழை, புயல் செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Banner case, Banners, Cyclone Nivar