Cyclone Nivar: கடலூரில் இருள் சூழ்ந்தது - காற்றுடன் கனமழை

கடலூர்

காற்றின் வேகம் அதிகமாக வீசக் கூடும் என்பதால், அலட்சியப் படுத்தாமல் புயல் பாதுகாப்பு மையத்தில் மக்கள் தங்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • Share this:
    நிவர் புயல் காரணமாக கடலூரில் தற்போது காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், இருள் சூழ்ந்தாற்போல் காட்சி அளிக்கிறது.

    நிவர் புயலானது புதுவையில் இருந்து சுமார் 150 கிமீ தொலைவில் உள்ளதால், இன்று இரவு கரையை கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்கால் மாமல்லபுரம் இடயே கடக்கும் இந்த புயலால், கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்லது. இந்நிலையில், கடலூர் கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்தாலும் வீட்டில் இருக்காமல் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    காற்றின் வேகம் அதிகமாக வீசக் கூடும் என்பதால், அலட்சியப் படுத்தாமல் புயல் பாதுகாப்பு மையத்தில் மக்கள் தங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





    மழை, புயல் செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Yuvaraj V
    First published: