Home » News » Tamil-nadu » CYCLONE NIVAR FORMED IN BAY OF BENGAL HEAVY RAINFALL ALERT TO CHENNAI AND COASTAL DISTRICTS YUV

Cyclone Nivar: உருவானது நிவர் புயல்...! 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது

Cyclone Nivar | தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னதாகவே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Cyclone Nivar: உருவானது நிவர் புயல்...! 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது
நிவர் புயல்
  • Share this:
வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலானது நாளை மாலை தொடங்கி இரவு வரை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலானது சென்னைக்கு கிழக்கே 450 கிமீ தொலைவில் 5 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது இன்று மாலை அதிதீவிர புயலாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் உருவாகியுள்ளதால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உட்பட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. புயல் கரை கடக்கும் இடத்தில் 110-120 கிமீ வரை காற்று வீச கூடும் என்றும், இன்றும், நாளையும் கன மழை முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் முன்னதாகவே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும், இன்று மதியம் 1.00 மணி முதல் பேருந்து போக்குவரத்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.பொதுமக்களும், தங்கள் சொந்த வாகனங்கள் மூலம், அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





உடனுக்குடன் செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: November 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading