• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Cyclone Nivar | நிவர் புயல்: உதவி மைய எண்கள் அறிவிப்பு..

Cyclone Nivar | நிவர் புயல்: உதவி மைய எண்கள் அறிவிப்பு..

நிவர்

நிவர்

Cyclone Nivar | தமிழக கரையை நோக்கி "நிவர்" புயல் நகர்ந்து வரும் நிலையில், மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் சார்பில் அவசர கால உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன

  • Share this:
    நிவர் புயல் எதிரொலியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டி வரும் நிலையில், மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம், புயல் கால அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. மாநில அளவில் அவசர உதவி எண் 1070, மாவட்டங்கள் அளவில் 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மக்கள், புயல் பாதிப்பு குறித்து, 1913 மற்றும் 044- 25384530 அல்லது 044- 25384540 என்ற அவசர எண்களில் புகாரளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல கடலூர் மக்கள் 220700, 233933, 221383, 221113 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.  223265 என்ற எண்ணில், விழுப்புரம் மாவட்ட மக்கள் புகார் கூறலாம். செங்கல்பட்டு பகுதியினர், 044- 27427412 அல்லது 27427414 என்ற எண்களை பயன்படுத்தலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 044-27664177 மற்றும் 044-27666746 என்ற எண்களில் திருவள்ளூர் மாவட்ட மக்கள் தொடர்பு கொள்ளவேண்டும்.

    இதேபோல் திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    மேலும் படிக்க... நிவர் புயல் - இன்று பொது விடுமுறை - டாஸ்மாக் கடைகளை சூழலுக்கு ஏற்ப மூட உத்தரவு  

    Petrol Diesel | பெட்ரோல் பங்குகள் இன்று வழக்கம்போல் இயங்கும்.. பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு..

    மின்சார பாதிப்பு: உதவி எண்கள்

    மின்சாரத்துறையும், நிவர் புயல் கட்டுப்பாட்டு உதவி மையத்தை அமைத்துள்ளது. அதன்படி மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு, சென்னை தெற்கு பகுதி மக்கள், 9445850434 மற்றும் 9499050188 என்ற அலைபேசி எண்களிலோ அல்லது, 044- 24713988, 23713681 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை வடக்கு பகுதிக்கு 9445850929, சென்னை மையப் பகுதிக்கு 9445449217 மற்றும் சென்னை மேற்கு மண்டலத்துக்கு 9445850500 என்ற எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மக்களுக்கு 9444099437 மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 9445858740 என்ற எண்களையும் மின்சாரத்துறை அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: