• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Nivar Cyclone | கடலூர், நாகை, புதுச்சேரி, தூத்துக்குடி துறைமுகங்களில், 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

Nivar Cyclone | கடலூர், நாகை, புதுச்சேரி, தூத்துக்குடி துறைமுகங்களில், 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..

3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...

3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...

நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடலூர், நாகை, புதுச்சேரி, தூத்துக்குடி துறைமுகங்களில், 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

  • Share this:
    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் இது புயலாக வலுப்பெற்று புதன்கிழமை பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இப்புயலுக்கு நிவர் என பெயரிடப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தூத்துக்குடி, ராமேஸ்வரம், புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், மணக்குடி, பள்ளம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதேபோல் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில் 250-க்கும் மேற்பட்ட படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் தேவநேரி பகுதியில், படகுகள், வலைகளை பாதுகாப்பாக வைக்க போதிய இடம் இல்லை என மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தங்கள் உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.



    இதற்கிடையே, புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை மையத்தில் இருந்து 120 பேர் அடங்கிய 6 குழுக்கள், கடலூர் மாவட்டத்துக்கு சென்றுள்ளனர். ரப்பர் படகு, மரம் அறுக்கும் கருவிகள், நவீன மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    கடலூர் மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திர சேகர சாகாமுரி தெரிவித்துள்ளார். முன்னதாக, தைக்கால் தோணித்துறை, ராசாப்பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களை அவர் பார்வையிட்டார்.

    Nivar Cyclone| வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தீவிர புயலாக மாறும்.. தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை..

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நிவர் புயலால் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் குடிசை வீடுகளை தார்ப்பாய் போட்டு மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு, காட்டுப்பள்ளி கடலோர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதேபோல், பல்வேறு மாவட்டங்களிலும் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    மேலும் படிக்க...நிவர் புயல்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு அதிக பாதிப்பு?

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 126 பேர் கடலூர் சென்றடைந்தனர். 20 பேர் கொண்ட ஆறு தேசிய பேரிடர் குழு கடலூர் ஆட்சியர் அலுவலகத்தை சென்றடைந்த நிலையில், அங்கிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு சென்று முகாமிட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: