Home /News /tamil-nadu /

Cyclone Nivar | தொடர் மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சென்னை புறநகர் பகுதிகள் - மக்கள் அவதி

Cyclone Nivar | தொடர் மழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சென்னை புறநகர் பகுதிகள் - மக்கள் அவதி

வெள்ளத்தில் மிதக்கும் புறநகர்

வெள்ளத்தில் மிதக்கும் புறநகர்

சென்னைப் புறநகர் பகுதிகள் முழுவதும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்துவருகிறது.

    கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. பின்னர் தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தீவிர புயலாக மாறியிருப்பதாகக் கூறப்பட்டது. இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், நவம்பர் 26 2.30 மணி வரை முழுவதும் கரையைக் கடந்தது. வானிலை ஆய்வு மைய தகவல்படி, தற்போது, புயலானது வலுவிழந்துக்கொண்டு வருகிறது. மேலும், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்றும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    நிவர் புயலால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. சில இடங்களில் லேசான மழை பெய்துவருகிறது. இருப்பினும், கடந்த இரு தினங்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. முடிச்சூர், மணிமங்கலம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகள் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து செல்வதால் புறநகர் பகுதியில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.



    வீடுகள் இரவோடு இரவாக வெள்ளத்தில் மூழ்கியதால் வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. அடையாற்றில் திறக்கப்பட்ட நீர் புறநகர் பகுதிகளை சூழ்ந்து கடந்து செல்கின்றது. குறிப்பாக, தாம்பரத்தை ஒட்டிய முடிஞ்சூர் பகுதிகளில் ஏராளமான வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Cyclone Nivar

    அடுத்த செய்தி