நிவர் புயலானது புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் இரவு 11.30 முதல் 2.30 மணி வரை முழுவதுமாக கரையை கடந்துள்ளது. இதனால், அதி தீவிர புயலாக இருந்து தீவிர புயலாக வலுவிழந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதற்கு பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும். இதன் காரணமாக உள்மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் அதிக கனமழையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Cyclone Nivar: நிவர் புயல் முழுவதுமாக கரையை கடந்தது
சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். மேற்கண்ட மாவட்டங்களில் காற்று 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மின் இணைப்பு மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்படலாம். வாழை, பப்பாளி மரங்கள் வேரோடு சாய்ந்து பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் வீட்டினுள் பாதுகாப்பாக இருக்குமாறும், அரசு மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
உதவிக்கு:
நிவர் புயல் எதிரொலியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டி வரும் நிலையில், மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம், புயல் கால அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
மாநில அளவில் அவசர உதவி எண் 1070, மாவட்டங்கள் அளவில் 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை, புயல் செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.