நிவர் புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். குடிசை வீடுகள் உட்பட மொத்தம் 101 வீடுகள் புயலால் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3,085 நிவாரண முகாம்களில் மொத்தமாக 2 லட்சத்து, 27,317 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாதிப்பு குறித்த விவரங்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும், சேதம் குறித்த தகவல்கள் முழுமையாக பெறப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நிவர் விவரம்
26 கால்நடைகள் உயிரிழந்திருப்பதாகவும், 380 மரங்கள் சாய்ந்து, அவை அகற்றப்பட்டிருப்பதாகவும், 19 மின்கம்பங்கள் சாய்ந்ததால், புதிய மின் கம்பங்களுக்கான பணிகள் நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது முழுதான விவரமல்ல. விவரங்கள், தொடர்ச்சியாக சேகரிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நிவர் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கான மீட்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என தமிழக முதல்வர் பழனிசாமியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக பேசுகையில் உறுதியளித்திருக்கிறார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடமும் உள்துறை அமைச்சர் பேசி உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடலூர் மாவட்ட புயல் பாதிப்புகளை இன்று பிற்பகல் தமிழக முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்வதற்காக செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.