ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீவிரமாகும் மாண்டஸ் புயல்.. தமிழகத்தில் எங்கெல்லாம் அதிகனமழை பெய்யும்? பாலச்சந்திரன் அறிவிப்பு

தீவிரமாகும் மாண்டஸ் புயல்.. தமிழகத்தில் எங்கெல்லாம் அதிகனமழை பெய்யும்? பாலச்சந்திரன் அறிவிப்பு

தமிழகத்தில் எங்கெல்லாம் அதிகனமழை பெய்யும்?

தமிழகத்தில் எங்கெல்லாம் அதிகனமழை பெய்யும்?

Weather Update | தமிழக கடற்கரை பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும், இதனால் மீனவர்கள் டிசம்பர் 10-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக இன்று மாலை வலுப்பெறுகிறது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயல் தீவிரமடைந்து வரும் நிலையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இயக்குனர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே தென் கிழக்கு திசையில் 770 கி.மீ தொலைவில் உள்ளது. காரைக்கால் தென் கிழக்கே 690கி.மீ தொலைவில் நிலைகொண்டு உள்ளது. மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இன்று மாலை புயல் சின்னமாக வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகர உள்ளதாக தெரவித்தார். இதன் காரணமாக நாளை கடலூர், மயிலாடுதுறை , திருச்சி , ராமநாதபுரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் டlடெல்டாவில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழக கடற்கரை பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும், இதனால் மீனவர்கள் டிசம்பர் 10-ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்தார்.

Also Read : மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு இனி ஈசிதான்.. மின்சார வாரியத்தின் நேரடி லிங்க்..!

டிசம்பர் 09-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

First published:

Tags: Cyclone Mandous, Weather News in Tamil