ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Cyclonen Mandous | 3 மணி நேரத்தில் வலுவிழக்கிறது தீவிர புயல் மாண்டஸ்

Cyclonen Mandous | 3 மணி நேரத்தில் வலுவிழக்கிறது தீவிர புயல் மாண்டஸ்

மாண்டஸ் புயல்

மாண்டஸ் புயல்

Cyclone Mandous | மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக 3 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்க கடலில் உருவாகி மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு புதுச்ரேி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க உள்ளது. மாண்டஸ் தீவிர புயலாக நேற்று உருவான நிலையில் இன்று காலை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 3 மணி நேரத்தில் மாண்டஸ் தீவிர புயல் வலுவிழந்து புயலாக மாறும் என அறிவிக்ப்பட்டுள்ளது. . தற்போது மாண்டஸ் புயல் சென்னைக்கு கிழக்கே 320 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது குறைந்தபட்சம் மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மாமல்லபுரத்தில் புயல் கரையை கடந்தாலும், கரையை கடக்கும் இடத்துக்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் புயலின் தாக்கம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று (டிசம்பர் 09) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Cyclone Mandous, Weather News in Tamil