ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல் எப்போது கரையைக் கடக்கும்... எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்... வானிலை மையம் தகவல்!

மாண்டஸ் புயல் எப்போது கரையைக் கடக்கும்... எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்... வானிலை மையம் தகவல்!

பாலச்சந்திரன்

பாலச்சந்திரன்

Cyclone Mandous : மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் தீவிர புயல் வலுவிழந்து புயலாக சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 269 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பாலச்சந்திரன், மாண்டஸ் புயல் இன்று இரவு நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுவை - ஸ்ரீஹரி கோட்டாவிற்கு இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்றார்.

இதனால் அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என என தெரிவித்தார். மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகு ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Cyclone Mandous : ஒக்கி, கஜா, மாண்டஸ்.... புயல்களுக்கு எவ்வாறு பெயரிடப்படுகிறது தெரியுமா?

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஒருரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நெருங்கும் மாண்டஸ் : தற்போது புயல் எங்கே இருக்கு... நேரலையில் பார்க்க வேண்டுமா?

புதுவை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிக கன மழைக்கான வாய்ப்பு உள்ளது என்றும் மீனவர்கள் 10ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Cyclone Mandous, Heavy rain