ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வலுவடைந்த மாண்டஸ்.. அதிதீவிர புயலாக கரையை கடக்கும் - வானிலை மையம் அலெர்ட்

வலுவடைந்த மாண்டஸ்.. அதிதீவிர புயலாக கரையை கடக்கும் - வானிலை மையம் அலெர்ட்

வலுவடைந்த மாண்டஸ்.. அதிதீவிர புயலாக கரையை கடக்கும்

வலுவடைந்த மாண்டஸ்.. அதிதீவிர புயலாக கரையை கடக்கும்

Cyclone Mandous | மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது , சென்னைக்கு தென்கிழக்கில் 550 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இதனிடையே மாண்டஸ் புயல் அதிதீவிர புயலாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை காலை அதிதீவிர புயலாகவே மாண்டஸ் கரையை கடக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

First published:

Tags: Cyclone Mandous, Weather News in Tamil