ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

85 கிமீ வேகத்தில் காற்று.. நள்ளிரவில் உருவானது மாண்டஸ் புயல்.. அதிகனமழைக்கான லேட்டஸ்ட் அலெர்ட்!

85 கிமீ வேகத்தில் காற்று.. நள்ளிரவில் உருவானது மாண்டஸ் புயல்.. அதிகனமழைக்கான லேட்டஸ்ட் அலெர்ட்!

மழை

மழை

Cyclone Mandous : காரைக்காலுக்கு தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் தொலைவிலும் , சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னத்தால் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. தொடர்ந்து கடந்த ஆறு மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் இந்தப் புயலானது , காரைக்காலுக்கு தென்கிழக்கில் 560 கிலோமீட்டர் தொலைவிலும் , சென்னைக்கு தென்கிழக்கில் 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

மாண்டஸ் புயல்.. கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நெருங்கி வரும் ஒன்பதாம் தேதி நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மிக முதல் அதிக கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்தெரிவித்துள்ளது

எங்கெல்லாம் மழை:

கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை வரை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரியில் அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மற்றும் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கலில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டிசம்பர் 10ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

First published:

Tags: Cyclone Mandous, Weather News in Tamil