ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல் நிவாரணம் எப்போது கிடைக்கும்? அமைச்சர் கொடுத்த அப்டேட்!

மாண்டஸ் புயல் நிவாரணம் எப்போது கிடைக்கும்? அமைச்சர் கொடுத்த அப்டேட்!

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விவரங்கள் பிற்பகலுக்குள் தெரிய வரும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த ஓரிரு நாளில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உறுதியளித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக மாறி, பின்னர் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்தது. நேற்று இரவு 11 மணி வாக்கில் புயல் கரையை கடக்கும் போது கனமழையுடன் சூரைகாற்றும் வீசியது. சென்னையை புரட்டிப்போட்ட இந்த புயல் மேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மாண்டஸ் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் நிவாரணம் வழங்கப்படும் எனறும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மாண்டஸ் புயலால் பெரிய அளவில் சேதம் இல்லை எனவும் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விவரங்கள் பிற்பகலுக்குள் தெரிய வரும் எனவும் கூறினார்.

First published:

Tags: Chennai rains, Cyclone Mandous, Rain Update, Weather News in Tamil