ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குட்! தமிழக அரசை பாராட்டிய ராமதாஸ்

புயல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குட்! தமிழக அரசை பாராட்டிய ராமதாஸ்

ராமதாஸ் - மு.க.ஸ்டாலின்

ராமதாஸ் - மு.க.ஸ்டாலின்

PMK Ramadoss Statement | மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது என பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேத்தில் காற்று பலமாக வீசியது. இதனால் பெரும்பலான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாலைகளில் சாய்ந்த மரங்களை மாநகராட்சி பணியாளர்கள் இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கனமழையின் காரணமாக மின்வெட்டுகள் இருந்த போதும் அவை உடனடியாக சரிசெய்யப்பட்டன. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்கூட்டியே பேரிடர் அமைப்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக அரசு இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆலோசனை செய்து அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்து.

இந்நிலையில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது என பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்துள்ளனர்.

Also Read : மாண்டாஸ் போயாச்சு.. ஆனால் மிக கனமழை இருக்கு - இந்திய வானிலை மையம் அலெர்ட்

புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள்!

நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதைப் போன்றே கிராமப்பகுதிகளிலும் புயல் பாதிப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்.

திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலோரப்பகுதிகளில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், மீனவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, DMK, MK Stalin, PMK, Ramadoss