ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெருங்கும் மாண்டஸ் புயல்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை - வானிலை அலெர்ட்

நெருங்கும் மாண்டஸ் புயல்.. அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை - வானிலை அலெர்ட்

வெதர்மேன் மழை எச்சரிக்கை

வெதர்மேன் மழை எச்சரிக்கை

Cyclone Mandous | சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டிலும் சேலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று (07.12.2022) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 08-09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக வலுவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டிலும் சேலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்ட இடையே தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. டிசம்பர் 9 ஆம் தேதி இரவு முதல் 10 ஆம் தேதி காலை வரை புயல் (Cyclone Mandous) கரைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடதமிழக கடலோர மாவட்டங்களில் டிசம்பர் 8 மாலை முதல் பலத்த காற்று வீசும். டிசம்பர் 9 மாலை முதல் 10 ஆம் தேதி காலை வரை மணிக்கு 70-90 கி.மீ வேகத்தில் காற்று வீசும். டிசம்பர் 8, 9, 10 ஆகிய 3 நாட்கள் கடல் கொந்தளிப்புடன் இருக்கும். இதனால் மீனவர்கள் இந்த நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தென் மண்டல வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Cyclone Mandous