ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நெருங்கும் மாண்டஸ் : தற்போது புயல் எங்கே இருக்கு... நேரலையில் பார்க்க வேண்டுமா?

நெருங்கும் மாண்டஸ் : தற்போது புயல் எங்கே இருக்கு... நேரலையில் பார்க்க வேண்டுமா?

மாண்டஸ் புயல் லைவ்

மாண்டஸ் புயல் லைவ்

Cyclone Mandous : மாண்டஸ் புயல் எங்கே, எப்போது கரையை கடக்கும் என்று பார்க்க வேண்டுமா? Live Update ( windy.com)

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள மாண்டஸ் புயல், தீவிர புயலாக மாறியுள்ளது. அதன் நகரும் வேகம் குறைந்துள்ள நிலையில், இன்றிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தீவிரப்புயல் 3 மணி நேரத்தில் புயலாக வலு குறையும் என்றும் தற்போது சென்னையில் இருந்து 270 கிலோ மீட்டர் தென்கிழக்கு நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயலின் நகரும் வேகம் மணிக்கு 15 கிலோ மீட்டரிலிருந்து 12 கிலோ மீட்டராக குறைந்துள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இன்று அது மீண்டும் புயலாக வலு குறையும் என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வெளியே வராதீங்க.. அத்தியாவசிய பொருட்களை வாங்கி வச்சுகோங்க.. தமிழ்நாடு அரசு அலெர்ட்..

மேலும் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே இன்றிரவு கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ள நிலையில். இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தற்போது புயல் எங்கே இருக்கு...

புயல் இப்போது எங்கே இருக்கிறது. அது எப்போது கரையை கடக்கும் என்பதை windy தளத்தில் லைவாக பார்க்கலாம். புயலின் தற்போதைய நிலையையும், இனி வரும் காலங்களின் நிலையையும் நேரலையாக காணலாம். குறிப்பாக நேரம் அல்லது தினத்தை தேர்ந்தெடுத்தால் அந்த நேரத்தில் புயல் எங்கு இருக்கும் என்பதையையும் தெளிவாக பார்க்கமுடியும்.

https://www.windy.com/

மாண்டஸ் புயல் தற்போதைய நிலையை பார்க்க....

First published:

Tags: Cyclone Mandous, Live, Weather News in Tamil