ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

என்னா குளிர்டா சாமி... ஐஸ் போல் மாறிய வாட்டர்.. குளிரில் நடுங்கும் மக்கள்..

என்னா குளிர்டா சாமி... ஐஸ் போல் மாறிய வாட்டர்.. குளிரில் நடுங்கும் மக்கள்..

மாதிரி படம்

மாதிரி படம்

Cyclone Mandous | வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னும் பனிக்காற்று மற்றும் சாரல் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்  அதிபுயலாக வலுப்பெற்றது. இதையடுத்து நேற்று மாண்டஸ்  அதிதீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. மாண்டஸ் புயல் கரையை கடந்த போது பலத்த காற்று  மற்றும் கனமழை பெய்தது

மாண்டஸ் புயல் கரையை கடந்த போது 60 கி.மீ முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாகத்தில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

புயலின் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 142 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்த்தில் 106 ம.மீ மீனம்பாகத்தில் 103 மற்றும் மாதவரத்தில் 87 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பனிக்காற்று மற்றும் சாரல்மழை பெய்து வருகிறது. வீடுகளில் தண்ணீரை திறந்தால் ஐஸ் போல் கொட்டுகிறது. குளிர்ந் நீராக குடிநீர் வருவதால் அதனை அப்புடியே குடிக்காமல் சூடுசெய்து குடிப்பது உடல்நிலைக்கு சிறந்தது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.பனிகாற்று வீசுவதால் குளிர் தாங்க முடியாமல் பலர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

Also Read : புயலால் ஏற்பட்ட மின்தடை எப்போது சீராகும்..?- மின்துறை அமைச்சர் கொடுத்த அப்டேட்!

மேலும் சாலைகளில் வாகன ஓட்டிகள் பைக் ஓட்ட முடியாமல் திணறி வருகின்றனர். காலை முதலே பனி மூட்டமாக இருந்ததால் முகப்பு விளக்குகளை எரிய விட்டே வாகனங்கள் ஓட்டி வருகின்றனர். கனமழை இல்லை என்றாலும் சாலை முழுவதும் சாரல் மழை இருந்து கொண்டு தான் இருக்கிறது.

தற்போது சென்னை மக்கள் என்னா குளிர்டா சாமி என்றவாறு மினி ஊட்டி போல் இருக்கும் கிளைமேட்டை அனுபவத்தி வருகின்றனர்.

First published:

Tags: Chennai, Cyclone Mandous