கஜா புயலால் வீழ்ந்த மரங்களுக்கு புதுவடிவம் கொடுத்த இளைஞர்கள்!
கஜா புயலால் வீழ்ந்த மரங்களுக்கு புதுவடிவம் கொடுத்த இளைஞர்கள்!
புயலால் வீழ்ந்த மரங்களுக்கு புதுவடிவம் கொடுத்த இளைஞகர்கள்
#CycloneGaja | புதுக்கோட்டை மாவட்டம், நெய்வத்தளி, அறந்தாங்கியில் கஜா புயலால் வீழ்ந்த தென்னை மரங்களை பயனுள்ளதாக மாறிய இளைர்களை விவசாயிகள் பாரட்டி வருகின்றனர்.
கஜா புயலின் கோரத் தாண்டவத்தில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்தன. புயல் தாக்கி ஒரு மாதங்களுக்கு மேல் ஆகியும், விழுந்து கிடக்கும் தென்னை மரங்களை அப்புறப்படுத்த கூட முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில், அறந்தாங்கி அருகே நெய்வத்தளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாக இணைந்து, “நமது நண்பர்கள் விவசாயக் குழு" என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பின் மூலம் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி செய்து வருகின்றனர்.
கஜா புயலால் வீழ்ந்த மரங்களுக்கு புது வடிவம் கொடுக்கும் இளைஞர்கள்.
அதன் ஒருபகுதியாக, சாய்ந்து கிடந்த தென்னை மரங்களை பயனுள்ள பொருளாக மாற்றி, அதற்கு புது வடிவம் கொடுத்துள்ளனர். தென்னை மரங்களை சரியான அளவில் வெட்டி, அதனை இருக்கைகளைப் போல வடிவமைத்துள்ளனர். தயார் செய்யப்படும் இருக்கைகள், தேநீர் கடைகள், பூங்காக்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தென்னை மரங்களை இருக்கைகளாக மாற்றும் இளைஞர்கள்.
இயற்கை விடுதிகள் நடத்தும் தொழிலதிபர்கள், இதுபோன்ற தென்னை இருக்கைகளை வாங்கிச் சென்றால், விவசாயிகள் பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பு ஏற்படும் என “நமது நண்பர்கள் விவசாயக் குழு” இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also See... கதையல்ல வரலாறு: கமல்ஹாசனின் மய்ய அரசியல்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.