• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைவு - முதல்வர்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைவு - முதல்வர்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

கஜா புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் உடனடியாக பார்வையிடவில்லை என்று மு.க ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயல் பாதித்த பகுதிகளில் இன்று ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் புயல் பாதிப்பு குறைந்ந்துள்ளது” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார்குளம், மச்சுவாடி பகுதியை முதல்வர் பார்வையிட்டார். புயலால் உயிரிழந்த குடும்பத்துக்கு நிவாரண உதவியை வழங்கினார்.

புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் ஆய்வு


புயல் பாதிப்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வருக்கு பாதிப்புகளை விளக்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், “புதுக்கோட்டை மாவட்டம் கடும் சேதத்தை சந்தித்துள்ளது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்புகள் குறைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கண்டிப்பாக நிவாரணம் வழங்கப்படும். கிராமப்பகுதியில் 5 நாட்களில் மின்சாரம் வழங்கப்படும். நாளை மறுநாள் பிரதமரை சந்திக்க வாய்ப்பு உள்ளது. சேதமதிப்பீடு கணக்கிடப்பட்டு மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டு, தேவையான நிவாரணம் பெறப்படும்” என்று கூறினார்.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: