• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • "கூடுதல் மின் ஊழியர்கள் வரவழைப்பு; சீரமைப்பு பணிகள் தீவிரம்" ஓ.எஸ்.மணியன்

"கூடுதல் மின் ஊழியர்கள் வரவழைப்பு; சீரமைப்பு பணிகள் தீவிரம்" ஓ.எஸ்.மணியன்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக, முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியில் மக்களுக்கு விரைந்து மின்சாரம் வழங்க, கூடுதலாக ஆயிரம் மின் வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக, கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, வேதாரண்யம், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் சீரமைப்பு பணிகள் கடந்த 18 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மழுக்கன்பட்டி கிராமத்தில், இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை - மதுரை சாலையில் மரக்கிளைகளை உடைத்து சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டத்திலும் கிராமப்பகுதிகளில் இன்னும் மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை. இதையடுத்து, மின் சீரமைப்புப் பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் கூடுதலாக ஆயிரம் மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு இருப்பதாக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, மழையூர், விராலிமலை பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீர் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனை மின் துறை அமைச்சர் தங்கமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். புயல் பாதிப்பு பகுதிகளில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

புயல் பாதிக்க இடங்களில் மின்சாரம் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருள்களும் குவிந்து வருகிறது.

சேலத்தில் 2-ம் வகுப்பு படித்து வரும் நேத்ரா என்ற மாணவி, தனது நண்பர்களுடன் ஸ்கேட்டிங் மூலம் கடை கடையாக சென்று, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க, 10 ஆயிரத்து 258 ரூபாய் வசூலித்துள்ளார். அந்த நிதிக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ரோகிணியிடம் மாணவி நேத்ரா வழங்கினார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: