• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா புயல் - 11 நாட்களாக மின்சாரம் இன்றி பரிதவிக்கும் கிராம மக்கள்

கஜா புயல் - 11 நாட்களாக மின்சாரம் இன்றி பரிதவிக்கும் கிராம மக்கள்

இருளில் உணவு அருந்தும் மறவபட்டி குழந்தைகள்

இருளில் உணவு அருந்தும் மறவபட்டி குழந்தைகள்

Cyclone Gaja | கஜா புயலால் மறவப்பட்டி கிரமத்தில் மின்சாரம், அடிப்படை வசதி இல்லாமல் 25 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றது போல இருப்பதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயல் தாக்கியதில் இருந்து 11 நாட்களாக இருளில் மூழ்கியுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில், மின்சாரம் இன்றி, பழங்கால வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாக  மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

'கஜா' புயலின் கோரதாண்டவத்தில், 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்ததால், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தலைநகரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கவிநாடு மேற்கு வட்டத்தைச் சேர்ந்த, மறவபட்டி கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில், புயல், பாதிப்பால் வீடு, உடைமைகளை இழந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

கார்த்திகை திருநாளை ஒட்டி, தமிழகம் தீப ஒளியில் மின்னிவரும் வேளையில், மறவபட்டி கிராமம் இருளில் மூழ்கியுள்ளது. இருந்த போதும்,  தீபம் மற்றும் சிமில் விளக்கு, மண்ணெண்ணெய் விளக்குகள் மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.

இதுஒருபுறம் இருக்க, மழை, அதனால் தேங்கிய நீர், அதில் பெருகியுள்ள கொசு என சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால், தொற்று நோய் அச்சம், மக்களை மேலும் கவலையடைச் செய்துள்ளது. இதனிடையே, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் செய்வது அறியாமல் கலங்கி நிற்கின்றனர்.

மின்சாரம் இன்றி மண்ணெண்னை விளக்கில் சமைக்கும் மறவபட்டி கிராம பெண்


11 நாட்களாக கடும் இன்னல்களுக்கு ஆளாகியும் இதுவரை, அரசியல் தலைவர்களோ, உயர் அதிகாரிகளோ தங்களை வந்து பார்க்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

நகரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு தேடிச் சென்று நிவாரணம் வழங்கும் அதிகாரிகள், அருகில் உள்ள தங்கள் கிராமத்தை ஏன் புறக்கணிக்கின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போதைய குழந்தைகள், டி.வி,செல்போன் என அவற்றிலேயே மூழ்கிக் கிடக்கும் தருவாயில், மறவபட்டி கிராமத்தில் மின்சாரம் இல்லாததால், மாலைப்பொழுதில், மாணவர்கள் சக நண்பர்களுடன் கூடி விளையாடுவதை காணமுடிகிறது.

மின்சாரம், அடிப்படை வசதி இல்லாததால் 25 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுள்ளதாக கூறப்படும், டெல்டா மாவட்டங்களில், எப்பொழுது வெளிச்சம் ஏற்படும் என்ற ஏக்கத்தில் மக்கள் காத்திருக்கின்றனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: