“வருகிறது கஜா புயல்”: நவம்பர் 15 தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’

நவம்பர் 15-ல் வட தமிழகம், தெற்கு ஆந்திரா நோக்கி ‘கஜா புயல்’ நகர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

“வருகிறது கஜா புயல்”: நவம்பர் 15 தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’
(கோப்பு படம்)
  • News18
  • Last Updated: November 11, 2018, 11:48 AM IST
  • Share this:
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 15-ம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்திற்கு ‘ரெட் அலர்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இந்த புயல் நகரக் கூடும் எனவும்  அடுத்த 3 நாட்களில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக, நாளை முதல் தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் நவம்பர் 14-ம் தேதி மாலை முதல் கனமழை பெய்யும் என்றும், அதே நேரத்தில் வரும் 15-ம் தேதி கஜா புயல் வலுவிழந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்றும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கஜா புயல் காரணமாக நாளை முதல் 15-ம் தேதி வரை வங்கக் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைதிரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு ‘ரெட் அலார்ட்’ கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கடலூர், நாகை, புதுச்சேரி, பாம்பன் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Also See....

First published: November 11, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்