Home /News /tamil-nadu /

மழையை விட அதிக சேதங்களை ஏற்படுத்திய காற்று

மழையை விட அதிக சேதங்களை ஏற்படுத்திய காற்று

சூறைக்காற்றால் இடிந்துள்ள கட்டிடம்

சூறைக்காற்றால் இடிந்துள்ள கட்டிடம்

Cyclone Gaja | நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கஜா புயல் கொண்டு வந்த சூறைக்காற்று பலத்த பொருட்சேதத்தை உண்டாக்கியுள்ளது.

  • News18
  • Last Updated :
தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் பெய்த கனமழையை விட, சூறைக்காற்று உயிர்ச்சேதம் மற்றும் அதிகளவிலான பொருட்சேதத்தை உண்டாக்கியுள்ளது.

தமிழக மத்திய கடலோர மாவட்டங்களை நேற்று நள்ளிரவில் கஜா புயல் தாக்கியது. கரையை கடந்த புயல் தற்போது திண்டுக்கலுக்கு மேற்கே மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலை நோக்கி நகர இருக்கும் கஜா புயலால் 10 உள்மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று வீசியதால் சரிந்து கிடக்கும் சிக்னல்


நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கடலோர பகுதிகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன. கனமழை ஏற்படுத்திய சேதத்தைவிட சூறைக்காற்றால் ஏற்பட்ட சேதமே அதிகம் என்று கூறப்படுகிறது. புயலுக்கு இதுவரை 20 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவருமே சுவர் இடிந்து விழுந்து அல்லது மரம் முறிந்து விழுந்தே உயிரிழந்துள்ளனர்.

புயலால் செல்போன் கோபுரங்கள் சரிந்துகிடக்கும் காட்சி


வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். கட்டிடங்கள், பள்ளி வாசல்கள் ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளது. செல்போன் கோபுரங்கள், சாலை சிக்னல்கள் சரிந்து விழுந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின்கம்பங்கள், மின்மாற்றிகளும் சரிந்து விழுந்துள்ளன. இதனால், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் முறிந்து விழுந்த மரங்கள்


செல்போன் சிக்னல்கள் கிடைக்காத சூழலில், வெளியூரில் இருப்பவர்கள் தங்களது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. கனமழையால் பெரிய பாதிப்புகள் ஏற்படாத நிலையில், சூறைக்காற்று ஏற்படுத்தியுள்ள சேதமே அதிகம் என்று பாதிக்கப்பட்ட மக்களும் தெரிவித்துள்ளனர்.

Also See..

Published by:Sankar
First published:

Tags: Cyclone Gaja

அடுத்த செய்தி