• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஒரு வாரத்தில் புயல் ஆய்வறிக்கை தாக்கல்: மத்தியக் குழுத் தலைவர்

ஒரு வாரத்தில் புயல் ஆய்வறிக்கை தாக்கல்: மத்தியக் குழுத் தலைவர்

மத்தியக்குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட்

மத்தியக்குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதியை பார்வையிட்ட மத்திய குழுவினருடன், புதுச்சேரி முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயல் சேதம் குறித்த அறிக்கை ஒரு வாரத்துக்குள், மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும் என மத்தியக் குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. டெல்டா பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத அளவிற்கு முழுவதுமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாநில அரசு, மத்திய அரசிடம் ரூ.15000 கோடி நிவாரணமாக கோரியது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. அந்த மத்தியக் குழு கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து முடித்தது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் பகுதியை பார்வையிட்ட மத்திய குழுவினருடன் முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன், தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு சிறப்பாக செய்துள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சட் பாராட்டினார். கூட்டத்தின் முடிவில் ரூ.187 கோடி ரூபாய்க்கான கஜா புயல் சேத அறிக்கையை முதலமைச்சர் நாராயணசாமி மத்திய குழுவினரிடம் வழங்கினார்.

காரைக்காலில் ஆய்வை முடித்துக் கொண்ட மத்திய குழுவினர்  புதுச்சேரியிலிருந்து சென்னை புறப்பட்டனர். சென்னையிலிருந்து டெல்லி செல்லும் அவர்கள்,  மத்திய அரசிடம் விரைவில் அறிக்கை சம்ப்பிக்க உள்ளனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: