• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புயலால் 6ஆவது நாளாக இருளில் மூழ்கிக் கிடக்கும் கிராமங்கள்..

புயலால் 6ஆவது நாளாக இருளில் மூழ்கிக் கிடக்கும் கிராமங்கள்..

மரித்துவமனையில் மின்சாரம் இன்றி தவிக்கும் டெல்டா மக்கள்

மரித்துவமனையில் மின்சாரம் இன்றி தவிக்கும் டெல்டா மக்கள்

Cyclone gaja | கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை இழந்து 6-ம் நாளாக மின்சாரமின்றி தவித்து வரும் மக்கள் இரவில் தூங்குவதற்கு பாதுகாப்பான இடம் தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மின்சார சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில் தஞ்சை மாவட்டக் கிராமங்கள் 6-ம் நாளாகத் தொடர்ந்து இருளில் மூழ்கியுள்ளன. ஒரத்தநாட்டை அடுத்துள்ள கீழவண்டிப்பட்டு கிராமத்திலும் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்திலேயே இரவுகள் கழிந்து வருகின்றன. வீடுகளை இழந்த மக்கள் இரவு நேரங்களில் படுத்துறங்க பள்ளிக் கூடத்திற்கும், உறவினர்களின் வீடுகளையும், பொது கட்டிடங்களையும் தேடி அலையும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் மானாவரி பயிரான வெள்ளைச் சோளம் பயிரிட விவசாயிகள் அமைத்த பசுமைக் குடில்கள் சிதைந்து போய் கிடக்கின்றன. 8,90,000 செலவில் வங்கிக் கடன் பெற்று சொட்டு நீர் பாசன முறையில் பயிரிட்ட இந்த வெள்ளைச் சோளத்தை அடுத்த மாதம் அறுவடை செய்யக் காத்திருந்தார்கள். ஆனால் கஜா புயல் சூறையாடியதால் சேதமடைந்த இந்த சோளப் பயிர் இனி மாட்டிற்கு உணவாக மட்டுமே பயன்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

புதுச்சேரி காட்டேரிக்குப்பம் பகுதியில் பால் பிடித்து கதிராக இருந்த நெற்பயிர்கள் புயல், மழையால் தலை சாய்ந்து கிடக்கின்றன. இனி விளைச்சல் வீடு வந்து சேராது என்பதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ஆய்வு செய்த புதுச்சேரி துணை வேளாண் இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

கஜா புயலில் தூக்கி எறியப்பட்ட கிரைண்டர்


கஜா புயலின் வேகம் எத்தகையதாக இருந்தது என்பதற்கு 6 நாட்களுக்கு பின்னும் காட்சியாக இருக்கும் இந்த கிராமங்கள். திருவாரூர் மாவட்டம் ஆலத்தம் பாடியில் புயலின்போது வீட்டின் மேற்கூரை பறந்துவிடக் கூடாது என அதில் எடை அதிகமுள்ள கிரைண்டரை வீட்டின் உரிமையாளர் தொங்கவிட்டிருந்தார்.

ஆனால் புயலோ கிரைண்டருடன் மேற்கூரையைத் தூக்கி அருகில் இருந்த மரத்தின் மீது வீசிச் சென்றுவிட்டது.

Also see... 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: