• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா புயல் பாதிப்புக்கு திருமாவளவன், விவேக் உள்பட பிரபல நிறுவனங்கள் நிதியுதவி

கஜா புயல் பாதிப்புக்கு திருமாவளவன், விவேக் உள்பட பிரபல நிறுவனங்கள் நிதியுதவி

நடிகர் விவேக்

நடிகர் விவேக்

கஜா புயல் பாதிப்புக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பிரபலங்கள் மற்றும் பிரபல நிறுவனங்கள் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தி சென்றுள்ள கஜா புயல் பாதிப்புக்கு திருமாவளவன், விவேக் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் உள்பட பிரபல நிறுவனங்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு உதவி வழங்கினர்.

டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதத்தை உண்டாக்கிய கஜா புயலுக்கான நிவாரண நிதியை பலர் வழங்கி வருகின்றனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, நடிகர் விவேக் 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை வழங்கினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை திருமாவளவன் வழங்கினர். இதே போல் பிரபல சிமெண்ட் நிறுவனமான ராம்கோ, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை, சரவணா ஸ்டோர்ஸ், தரணி சுகர்ஸ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு கோடி ரூபாய் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தென்னிந்திய சர்க்கரை ஆலை சங்க தலைவர் பழனிசாமி ஆகியோரும் தலா ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை முதலமைச்சரிடம் வழங்கினர்.

நிவாரண நிதியை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விவேக், நமக்கு சோறு போடும் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் தமிழர்கள் அனைவரும் உதவிக்கரம் நீட்ட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

திருமாவளவன்


கஷ்டமோ, நஷ்டமோ என எதையும் எதிர்கொள்ளும் விவசாயிகள், இக்கட்டான சூழலில் தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் வலியுறுத்தினர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை கஸ்தூரி மற்றும் தொண்டு நிறுவனம் சேர்ந்து நிவரணப் பொருட்களை சென்னை சவேரா ஹோட்டலில் இருந்து அனுப்பி வைத்தனர்.

புயலால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பார்த்து உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 25,000 பணத்தை நிவாரணமாக அனுப்பி வைத்த விளாத்திகுளத்தை சேர்ந்த பள்ளி மாணவன், தேர்தலில் செலவிடுவது போல் அரசியல் தலைவர்கள் உதவி செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதே போல், ஓசூரிலிருந்து ஜெய் பீம்பேரவை சார்பில் 3, 50,000 மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையே, புயலால் வீழ்ந்துள்ள தென்னை, தேக்கு, சவுக்கு மரங்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு திருச்சியில் காவிரி ஆற்றில் புதைந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: