• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா புயல் பாதிப்பை பார்வையிட இன்று தமிழகம் வருகிறது மத்தியக்குழு

கஜா புயல் பாதிப்பை பார்வையிட இன்று தமிழகம் வருகிறது மத்தியக்குழு

கஜா புயலால் முற்றிலும் உருக்குலைந்த வீடுகள்

கஜா புயலால் முற்றிலும் உருக்குலைந்த வீடுகள்

Cyclone Gaja | தமிழகம் கோரும் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயல் சேதங்களை பார்வையிடுவதற்காக நீதித்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்தியக்குழு இன்று தமிழகம் வருகிறது.

தமிழகத்தில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியுள்ள கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியுடனான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பைத் தொடர்ந்து, மத்தியக்குழு இன்று தமிழகம் வருகிறது என்று வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மத்திய நீதித்துறை இணைச்செயலாளரான டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 5 அல்லது 6 அதிகாரிகள் இக்குழுவில் இடம் பெற்றிருப்பார்கள். இன்று அவர்கள் தமிழகம் வந்தடையும் நிலையில், சனிக்கிழமை பிற்பகலில் திருச்சியில் திட்டமிடப்பட்டுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு தொடங்க உள்ளனர். மேலும் 27-ம் தேதி வரை 4 நாட்கள் ஆய்வு நடத்திய பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். இதன் பின்னர் இக்குழு டெல்லி சென்று புயல் சேத விவரங்களை மத்திய அரசிடம் வழங்கும் என வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் சத்யகோபால் கூறியுள்ளார்.

இக்குழு வழங்கும் அறிக்கையின் மூலம் தமிழகம் கோரும் நிதி வழங்கப்படும் என நம்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: