• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா புயல்: இடைக்கால நிவாரணம் ஒதுக்கியது மத்திய அரசு

கஜா புயல்: இடைக்கால நிவாரணம் ஒதுக்கியது மத்திய அரசு

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்

கஜா புயல் பாதித்த இடங்களை பார்வையிட்ட ஆய்வுக்குழு அறிக்கையின் அடிப்படையில் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உரிய நிதி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 353.70 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

கடந்த நவம்பர் 15-ம் தேதி நாகை அருகே கரையைக்கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத சேதங்களை ஏற்படுத்தியது. தமிழக அரசு முதல்கட்டமாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து புயல் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே கஜா புயல் தொடர்பாக தமிழக அரசு அளித்த இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், மாநில பேரிடர் நிவாரண நிதியில், மத்திய அரசின் ஆண்டு பங்கிலிருந்து 353.70 கோடி ரூபாயை விடுவித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Cyclone Gaja | கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள்


இதுதவிர, தமிழகத்தில் கஜா புயல் பாதித்த இடங்களை பார்வையிட்ட ஆய்வுக்குழு அறிக்கையின் அடிப்படையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நிதி விரைவில் விடுவிக்கப்படும் என்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்தி தெரிவித்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதி


மேலும், புயல் நிவாரணப் பணிகளில் விமானப்படை உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைப்புகளின் உதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, புயல் நிவாரணப் பணிக்காக 14,910 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்று பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் கோரிக்கை விடுத்தார்.  இதுதொடர்பாக மத்திய குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையிலேயே, மத்திய அரசு முடிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: