• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா புயல் - முதல்வருடன் மத்தியக்குழு ஆலோசனை

கஜா புயல் - முதல்வருடன் மத்தியக்குழு ஆலோசனை

தமிழக அரசு

தமிழக அரசு

Cyclone Gaja | இரண்டு குழுக்களாக பிரிந்து புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிடும் மத்திய அரசு அதிகாரிகள் மூன்று நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயல் சேதங்கள் தொடர்பாக ஆய்வு நடத்த தமிழகம் வருகை தந்துள்ள மத்தியக்குழுவினர், தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு 15000 கோடி ரூபாயை பேரிடர் நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும் என்று பிரதமரை சந்தித்த முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை அடுத்து, புயல் சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்தியக்குழு நேற்று தமிழகம் வந்தது.

மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான குழுவில் நிதித்துறை ஆலோசகர் கவுல், வேளாண்மைத் துறை இயக்குனர் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். இன்று காலை வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தலைமையில் தமிழக அதிகாரிகள், மத்தியக்குழுவுடன் ஆலோசனை நடத்தினர்.

கஜா புயலால் முறிந்த மரங்கள்


இதனை அடுத்து, தலைமைச் செயலகம் வந்த மத்தியக்குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, புயல் சேதங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், தலைமைச் செயலர் கிரிஜா வைத்திய நாதன் தலைமையில் நடக்கும் அனைத்து துறைச் செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அதில், துறை வாரியாக ஏற்பட்டுள்ள சேதங்களை, படங்களுடன் விளக்க உள்ளனர்.

இதனை அடுத்து, விமானம் மூலம் திருச்சி வரும் மத்தியக்குழு, அங்கிருந்து இரண்டு குழுவாக பிரிந்து புயல் பாதித்த மாவட்டங்களுக்கு செல்ல இருக்கிறது. அவர்களுடன் தமிழக அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.

மூன்று நாட்கள் சேதங்களை பார்வையிட்ட பின் 27-ம் தேதி, சென்னை திரும்பும் மத்தியக்குழு, மீண்டும் அதிகாரிகளுடன் ஆலோசித்த பின் டெல்லி சென்று அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் அளிக்கிறது.

Also See..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: